Coimbatore Blog

Coimbatore News

Share

ஓமிக்ரோன் கொரோனா new COVID-19 variant (B.1.1.529) SARS-CoV-2

ஓமிக்ரோன் கொரோனா ( OMICRON )- கவலை அளிக்க கூடிய கொரோனா

ஓமிக்ரோன் கொரோனா தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானாவில் முதலில் கண்டறியப்பட்டது. நவம்பர் 9ம் தேதி கண்டறியப்பட்டது. சரியாக ஓமிக்ரோன் கண்டறியப்பட்டு 3 வாரங்கள் ஆகிவிட்டன.
இதை உலக சுகாதார மையம் W.H.O கடந்த 26ம் தேதி கவலை அளிக்க கூடிய கொரோனா வகை என்று அறிவித்தது. 32 உருமாற்றங்கள் இருப்பது ஓமிக்ரோன் கொரோனா வகையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நவம்பர் 27ம் தேதி கணக்குப்படி பெல்ஜியம், போஸ்ட்வானா, ஜெர்மனி, ஹாங்காங், இஸ்ரேல், இத்தாலி, யுகேவில் இந்த ஓமிக்ரோன் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க தற்போது 110க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
டெல்டாவை விட இது அதிக முறை உருமாற்றம் அடைந்துள்ளது.
ஓமிக்ரோன் ஸ்பைக் புரோட்டின்களில் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நமது உடலில் உள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி, வேக்சின் ஆற்றல், ஓமிக்ரோன் கொரோனாவிற்கு எதிராக வேலை செய்யாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரோன் கொரோனா பரவிய பலருக்கு வேக்சின் போடப்படவில்லை. பலருக்கு குறைவாக வேக்சின் போடப்பட்டுள்ளது. ஓமிக்ரோன் கொரோனா பாதித்த பலர் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இதுவரை ஓமிக்ரோன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை, லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்துள்ளது. இதனால் ஓமிக்ரான் கொரோனாவிடம் இருந்து 2 டோஸ் வேக்சின் போட்டவர்கள் தப்பிக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளிநாட்டு பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் சோதனைகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் திடீரென செய்யப்படும் பயண விதி மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்.
பிசிஆர் டெஸ்ட் மூலமே ஓமிக்ரோன் கொரோனாவை கண்டறிய முடியும். 3 டார்க்கெட் ஜீன்கள் இதில் காணப்படவில்லை. இதை பிசிஆர் சோதனையில் கண்டறிய முடியும். இதன் மூலம் ஜீன் சோதனை செய்யாமலே ஓமிக்ரோன் கொரோனாவை ஓரளவிற்கு கண்டறிய முடியும். ஜீன் சோதனை மூலம் இதை உறுதி செய்யவும் முடியும்.


Hits: 2021, Rating : ( 5 ) by 1 User(s).